ரிசர்வேஷன் டிக்கெட்களை ரத்து செய்தால் கட்டணம் ரத்து இல்லையா?- ரயில்வே மறுப்பு

ரயிலை தவறவிட்டால், முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது என
வெளியான தகவலை ரயில்வே வாரியம் மறுத்துள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்து பணம் திரும்ப பெறுவதில், ஏற்கனவே
‌நடைமுறையிலுள்ள விதிமுறைகளே பின்பற்றப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்தவர்கள் ரயிலை தவறவிட்டால், ரயில் புறப்பட்ட இரண்டு மணி
நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், பாதிக் கட்டணம் திருப்பித்
தரப்படும் என்கிற நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் ரயில்வே
விளக்கம் அளித்துள்ளது.

ஆர்.ஏ.சி, வெயிட்டிங் லிஸ்ட்

ஆர்.ஏ.சி டிக்கெட் வைத்திருப்பவர்களும், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்
வைத்திருப்பவர்களும், ரயில் புறப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பின்னர்
பயணச் சீ்டடை ரத்து செய்ய முடியாது என்கிற நடைமுறையும் தொடரும் என ரயில்வே
தெரிவித்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் மறுப்பு

ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் ரயிலை தவறவிட்டால், அதற்கான
கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது என கடந்த இரு தினங்களுக்கு முன்னர்
பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள ரயில்வே நிர்வாகம்
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

thanks to : 

thats tamil
Close