மதுக்கூர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற அதிரை WFC அணியினர் (வீடியோ இணைப்பு)

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் அதிரை WFC அணியை எதிர்த்து மதுக்கூர் MFC அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இருஅணியினரும் 1-1 என்ற கோல் கணக்கில் நிறைவு செய்தனர். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் WFC அணி அபாரமாக கோல்களை விளாசி வெற்றி பெற்றது.

Close