பிரான்சில் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு!

பிரான்ஸின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஆவிநான் நகரில் ஒரு மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்து மக்கள் நேற்றிரவு 10.30 மணிக்கு தொழுகை முடித்து விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு காரில் வந்த இரண்டு முகமூடி அணிந்த மர்மநபர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

தாக்குதல் நடத்திய இரண்டு பேரில் ஒருவன் கைதுப்பாக்கியும், இன்னொருவன் வேறு ரக துப்பாக்கியும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயமடைந்தார்கள். அருகிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு இதில் காயம் ஏற்பட்டது

காயம் ஏற்பட்டவர்களில் 7 வயது சிறுமியும் ஆகும்.

துப்பாக்கி சூட்டை நடத்திய பின்னர், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பிரான்ஸில் கடந்த சில வருடங்களாக தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு எப்போதும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Close