அதிரையில் சமூக நல அறக்கட்டளை 4ஆம் ஆண்டு துவக்க விழா

அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட மாற்றுதிறனாளிகள், பேசஇயலாத – காது கேளாதோர் சமூக நல அறக்கட்டளை 4ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. 

தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பெரியவர் கே.ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் ராஜகோபால் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டன. முக்கிய தீர்மானமாக சட்ட ஆலோசகர் அவர்களை மாற்ற வேண்டும் என்றும், புதிதாக அ.அன்பழகனை சட்ட ஆலோசகராக நியமிக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.
 கடந்த ஆண்டு ஆண்டறிக்கையை துணை பொதுச்செயலாளர் உமர் தம்பி வாசித்தார். இனிவரும் ஆண்டு முதல் கணக்கு வழக்குகளை முறையாக வைத்திருக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Close