பொதுதேர்வையொட்டி இரவு நேரங்களின் மின்தடை வேண்டாம்

+2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு அரசு பொதுதேர்வு ஆரம்பமாகவுள்ளதால் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று மினவாரிய துறை அதிரிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மின்சார வரிய அதிகாரிகள் கூறியதாவது மின்சாரத்தின் தேவை அதிகரிப்பு, தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவு இருந்ததால் மின்சாரத்தின் தேவை குறைந்து சராசரியாக 10ஆயிரம் மெகா வால்ட் என்ற அளவு தேவை இருந்து வந்தது அதனால் தற்போது பனிப்பொழிவு குறைந்தது. கோடைகாலம் தொடங்கியிருப்பதால் வெப்பத்தின்த்தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மின்சாரத்தின் தேவை 1500 மெகா வால்ட் அதிகரித்து தற்போது 11,500 மெகா வால்ட் என்ற அளவிற்க்கு உயர்ந்துள்ளது. தேவைக்கேற்ப மின்னுர்ப்பத்தி செய்வதில் வல்வேறு இடையூருகள் ஏற்படுகிறது. குறிப்பாக அணுமின் நிலையங்கள் திடீரென்று கன்வேயர் பெல்ட் தீ பிடித்து டீயூப்புகள் வெப்பத்தின் தாக்கத்தால் பஞ்சராகுவதுப்போல் இடையூருகள் ஏற்படுகிறது. எந்திரங்கள் பழுதாவதற்க்கு வாய்ப்புள்ளது. இதனால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.           

Close