அதிரை SSMG கால்பந்து தொடர் – திருச்சி அணி வெற்றி!

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் அதிரை WFC அணியை எதிர்த்து திருச்சி அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இருஅணியினரும் 1-1 என்ற கோல் கணக்கில் நிறைவு செய்தனர். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் திருச்சி அணி அபாரமாக கோல்களை விளாசி வெற்றி பெற்றது.

நாளையதினம் நடைபெறும் போட்டியில் அதிரை AYFA அணியை எதிர்த்து தஞ்சை நெபோலியன் அணி விளையாடவுள்ளது.

A

Close