அதிரையில் துவங்கிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்!

தேர்தல் ஆணையத்‌தின் உத்தரவுப்படி கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு விடுபட்ட வாக்காள‌ர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் மா‌‌ற்று திறனாளிக‌ளை‌ வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகா‌ம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும் வருகின்ற 23ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 18 முதல் 21 வயதைச் சேர்ந்த இளம் வாக்காள‌ர்கள், மாற்று திறனாளிக‌‌ள் கலந்து கொண்டு
விண்ணப்பிக்கலாம்.

இதனை அடுத்து அதிரையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

புகைப்படம்: அஹமது மன்சூர்

Close