தஞ்சாவூரில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம்!

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் ஆக. 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
இந்த முகாமில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

படை வீரர் தொழில்நுட்பம், படைவீரர் செவிலிய உதவியாளர், படைவீரர் பொதுப் பணி, படைவீரர் எழுத்தர், பண்டகக் காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள்இணையவழி மூலம் ஜூலை 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இந்த வாய்ப்பை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை 04362 – 230104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Close