பரபரப்பான போட்டியில் காரைக்காலை வீழ்த்தி அதிரை AFFA அணி அபார வெற்றி (படங்கள் இணைப்பு)

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் அதிரை AFFA அணியை எதிர்த்து காரைக்கால் அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இருஅணியினரும் கோல் அடிக்காமல் நிறைவு செய்தனர். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் AFFA அணி அபாரமாக கோல்களை விளாசி வெற்றி பெற்றது.

நாளையதினம் நடைபெறும் போட்டியில் சீர்காழி அணியை எதிர்த்து தஞ்சை நேதாஜி அணி விளையாடவுள்ளது.

Close