இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா?

நம் தேசத்தில் குறிபிட்ட ஒரு மதத்தை (இஸ்லாத்தை) சார்ந்தவர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் BJP, RSS போன்ற மத வெறியர்கள் கங்கணம் கட்டிகொண்டு திரிகின்றனர்.

இந்தியாவில் இஸ்லாமியர்களே இல்லை என்று வைத்து கொள்ளுங்கள். அப்போது மட்டும் அடங்கி விடுமா? காவிகளின் இந்த வெறித்தனம்.

நிச்சயம் அடங்காது. பெரியார் அவர்களால் ஒழிக்கபட்ட ஜாதி வெறி மேலோங்கும்.

மத வெறியர்கள் ஜாதி வெறியர்களாகி விடுவார்கள். காவிகள் தாழ்த்தபட்டவர்களை ஒழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

தாழ்த்தபட்டவர்களின் வளர்ச்சியை சீர்குலைக்கச் செய்வார்கள் தலித்கள் சொந்த நாட்டில் அடிமைகளாக அடித்து ஒடுக்கபடுவார்கள் காவி பயங்கரவாதிகளால்.

தற்போது இருக்ககூடிய சூழலில் தாழ்த்தபட்டவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கும் ஒரு சில அரசு சார்ந்த வேலைகளிலும், விளையாட்டு துறையிலும் உயர்வு உயர் ஜாதியினர் என்று கூறி கொள்பவர்களால் மறைமுகமாக வாய்ப்புகள் மறுக்க படுகின்றது.

இந்தியாவை விட்டு இஸ்லாமியர்களை எவராலும் விரட்டியடிக்க முடியாது. இந்திய சுதந்திர போராட்டங்களில் இஸ்லாமியர்களின் இரத்தமும் கலந்துள்ளது.

காவிகளுக்கு இஸ்லாமியர்கள் மட்டும் எதிரியல்ல தாழ்த்தபட்ட அப்பாவி தலித் மக்களும் அவர்களுக்கு எதிரிகள்தான். உயர் ஜாதியினர் என்று கூறிக்கொள்ளும் அவர்களை தவிர அனைத்து மக்களும் அவர்களுக்கு தீண்ட தகாதோர் தான்.

இந்த பதிவின் நோக்கம் இஸ்லாமியர்களையும், ஏனைய மதத்தவர்களை, விரட்டி விட்டால் மட்டும் இந்தியா நிம்மதியாகி விடும் என்று என்னும் அறியாத சகோதர்களுக்காக எழுதபட்டது.

ஆக்கம் : அதிரை சாலிஹ்

Close