விரைவில் நனவாக இருக்கும் அதிரை மக்களின் பத்தாண்டு கனவு (படங்கள் இணைப்பு)

அதிரையர்களின் நீண்ட நாள் கனவான அகல ரயில் பாதை திட்டம் இன்னும் சில மாதங்களில் நனவாக உள்ளது. அதற்கு உண்டான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் ஏராளமான சிறிய மற்றும் பெரிய ரயில் பாலங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. பட்டுக்கோட்டையில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு, ரயில்நிலைய புணரமைப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அதிரையில் அகல ரயில்பாதைக்கான தண்டவாள கம்பிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ரயில் பாதையை மேடாக்குவதற்காக தற்பொழுது ஜல்லி மற்றும் செம்மண் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ரயில் பாதை குறித்து அதிகாரிகளும் அதிரைக்கு வருகை தந்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் அதிரையில் இந்த புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

களத்திலிருந்து படங்களுடன்: ரிஜாயத் (அதிரை பிறை)

Close