சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிரையர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

இந்த தகவல்கள் பலரும் அறிந்தவைதான். ஆனால் அதிரையில் ஒரு துப்பாக்கி சுடும் வீரர் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் மர்ஹூம் M.A.ஷேக் முஹம்மது. இவர்களது, மகன் வஜீர் அலி (வயது 42). துப்பாக்கி சுடுதல் வீரரான இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

துப்பாக்கி சுடுதலில் அதீத ஆர்வமும் திறமையும் உடைய இவர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவர் சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

 

Close