அதிரை கரிசல்மணி ஏரியில் குண்டும் குழியுமான தூர்வாரும் பணி! களத்தில் அதிரை சமூக நலக் கூட்டியக்கம்!

அதிரை கரிசல்மணி ஏரி ஒரு பகுதியில் உயரமாகவும், மற்றொரு பகுதியில் ஆழமாகவும் இருந்து வந்தது. ஆங்காங்கே புதர்களும் மண்டி இருந்தன. இதன் காரணமாக தண்ணீர் நிறைந்தால் ஒரு பகுதியில் மட்டும் தேங்கும் சூழல் நிலவியது. இதனையடுத்து ஏரியை சமன் படுத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அண்மையில் உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று ஒப்பந்ததாரர்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது.

ஆனால் சமன் படுத்தும் பணியை விடுத்து அவர்களும் சில பகுதிகளை மட்டும் தூர்வாரி, புதர்களை அகற்றாமல் இருந்து வந்தனர். இதனையடுத்து பொதுமக்களுடன் இதனை நேரில் சென்று பார்வையிட்ட அதிரை சமூக நலக் கூட்டியக்கத்தை சேர்ந்தவர்கள், பணியை சரியாக செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு தூர்வாரும் ஊழியர்கள் அலெட்சியமாக பதிலளித்துள்ளனர்.

இதனால் அத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் கூட்டியக்க நிர்வாகிகள், சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தூர்வாரும் பணியினை மேற்கொள்ளும் ஊழியர்களை எச்சரித்தனர். அதை தொடர்ந்து பணியை சரியாக செய்ய ஊழியர்கள் சம்மதித்தனர்.

Close