அதிரையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைப்பதாக எம்.எல்.ஏ சி.வி.சேகர் உறுதி!

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் (MLA) அவர்கள அதிரை TNTJ நிர்வாகிகள் சந்தித்து அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகள் ஒன்றுமே சரியாக இல்லை என்று ஊருக்கு வந்து ஆய்வு செய்யுமாறும் வலியுறுத்தினர். அதனை தானும் பார்த்ததாகவும் தற்பொழுது இரன்டு சாலைகள். போடவுள்ளதாகவும் மேலும் முக்கியமான சாலைகள் சிலவற்றை போடுவதற்க்கு முயற்சிக்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் மேலத்தெருவில் உள்ள. டிரான்ஸ்ஃபார்மர் போதுமானதாக இல்லாத்தால் புதிதாக ஒரு. டிரான்ஸ்ஃபார்மர் ஏற்படுத்தி தருமாறு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை உடனே பரிந்துரை செய்து EE அவர்களுக்கு கடிதம் வழங்கினார். அதனை உடனே பட்டுக்கோட்டை EB அலுவலகத்தில் TNTJ வினர் வழங்கினர்.

Close