அதிரை பேரூராட்சியின் அதிபுத்திசாலித்தனமான முயற்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை 21-வது வார்டுக்கு உட்பட்ட சி.எம்.பி லேன் ஹனீப் பள்ளி அருகாமையில் இருந்து VKM ஸ்டோர் வரை கழிவு நீர் குழாய் அமைக்கும் பணி கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. VKM பகுதி ஹனீப் பள்ளி இருக்கும் இடத்தை விட மூன்று அடி உயரமாக உள்ளது. இந்த சூழலில் கழிவு நீர் ஓடும் வாட்டம் இன்றி தலைகீழாக தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு கழிவு நீர் அனுப்பும் அதி புத்திசாலித்தனமான பணியை பேரூராட்சி செய்து வருகின்றது.

எந்தவொரு பயனும் இன்றி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த பணி குறித்து அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அணி நிர்வாகிகள் நேரில் சென்று ஊழியர்களிடமும் ஒப்பந்ததாரரிடமும் விசாரித்தனர். அதற்க்கு பேரூராட்சி இவ்வாறு பணியை மேற்கொள்ள சொன்னதாலேயே இந்த பணையை செயல்படுத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சாதாரண எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு கூட வரும் யோசனை அதிரை பேரூராட்சிக்கு வராதது வேடிக்கையாகவும், இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது வேதனையாகவும் உள்ளது.

Close