புதுக்கோட்டையை புரட்டிப்போட்ட அதிரை AFFA அணி!

ஆலத்தூர் கால்பந்து கழகம் சார்பாக கடந்த சில வாரங்களாக கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அதிரை AFFA அணி கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று நடைபெற்ற இத்தொடரின் காலிறுதிப்போட்டியில் அதிரை AFFA அணியை எதிர்த்து புதுக்கோட்டை அணி களமிறங்கியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய AFFA அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. நாளைய தினம் நடைபெறும் அரையிறுதி போட்டியில் AFFA அணியை எதிர்த்து மன்னார்குடி அணி களமிறங்குகிறது.

Close