நம்ம ஊரு EB இவ்ளோ ஸ்பீடா!

அதிரையில் நேற்று முன் தினம் (16-07-2017) அன்று இரவு தனியார் பள்ளி வாகனம் ஒன்று சித்திக்பள்ளிவாசல் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அதிரை மின்வாரியத்திற்கு தொடர்புகொண்டு புகாரளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அடுத்த இன்று புதிய மின் கம்பத்தை மின் வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் நிறுவியுள்ளனர். எப்போதும் ஒரு புகார் அளித்து பல நாட்கள் கழித்து அதனை சரி செய்யும் மின்வாரிய ஊழியர்கள் ஒரே நாளில் புதிய மின்கம்பம் அமைத்தது அப்பகுதி மக்களிடையே நன்றி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Close