மன்னார்குடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அதிரை AFFA அணி!

ஆலத்தூர் கால்பந்து கழகம் சார்பாக கடந்த சில வாரங்களாக கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அதிரை AFFA அணி கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இன்று 17/07/2017. நடைப்பெற்ற கால்பந்தாட்ட தொடரில் அதிரை AFFA அணியினரும், மண்ணார்குடி 7ன்ஸ் மண்ணார்குடி அணியினரும் அரையிறுதி ஆட்டம் விளையாடினர்.இதில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் மண்ணார்குடி அணியினர் அதிரை Affa அணியினருக்கு எதிராக முதல் கோல் அடித்து 1க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.முதல் பகுதி நேர ஆட்டத்தின் இருதி நேரத்தில் அதிரை Affa அணியினர் தங்கள் அணியின் சார்பாக 1கோல் அடித்தனர் 1-1 என்ற கோல் கணக்கில் முதல் பகுதி நேர ஆட்டத்தை முடித்தனர். இரண்டாம் பகுதி நேர ஆட்டம் விரு விருப்பாக சென்று கொண்டிருந்தது.ஆட்டம் முடிவடைய 10நிமிடங்களுக்கு அதிரை AFFA அணியினர் அடுத்து அடுத்து 2 ண்டு கோல் அடித்து ரசிகர்களை உர்சாகபடுத்தி 3 க்கு 1று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இருதி சுற்றுக்கு அதிரை AFFA அணியினர் முன்னேறி உள்ளனர்.

AFFA -3
மண்ணார்குடி – 1

வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றொம்

Close