சவுதியில் 62.77% வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

சவுதியில் 62.77% வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு என்று அமைச்சகம் வெளியிட்டுள்ளது:

சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் 2016 ஆம் ஆண்டு மொத்தம் 849,228 வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 533,016 வேலைவாய்ப்பு விசா விண்ணப்பங்கள் அதாவது 62.77% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 316,212 விண்ணப்பங்கள் மட்டுமே அதாவது 37.24% ஏற்கப்பட்டு விசா வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை வெளிநாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்து கொள்வதற்கான 5 ஆண்டு ஒப்பந்தங்களை துருக்கி, மெக்ஸிகோ, எகிப்து, இந்தியா, கம்போடியா, மொராக்கோ ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளன. குறுகியகால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) சீனா, ஜப்பான் மற்றும் மலேஷியா நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

சவுதி மக்களின் வேலைத்திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் புதிய நிதாகாத் சட்டம் எதிர்வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருவதாகவும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காலித் அபா அல் கைல் தெரிவித்தார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author