அதிரை WSC நடத்திய மாபெரும் கைப்பந்து தொடர் போட்டியில் மாயவரம் அணி சாம்பியன் (படங்கள் இணைப்பு)

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 17 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று முன் தினம் 18-07-17 அன்று  பெரிய ஜும்மா பள்ளிவாசல் பின்புறமாக உள்ள WSC மைதானத்தில் தொடங்கி நேற்று இரவு நிறைவடைந்தது. 2 நாட்கள் பரபரப்பாக நடைபெற்ற இத்தொடரில் பல ஊர்களை சேர்ந்த தலை சிறந்த வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சிறப்பாக விளையாடிய சாய் மாயவரம் அணி முதல் பரிசை கைப்பற்றி அசத்தியது. அந்த அணிக்கு  முதல்பரிசாக 15,000 ரூபாய் ரொக்கப்பணத்துடன் முன்னாள் அதிரை சேர்மன் MMS அப்துல் வஹாப் அவர்களின் நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

இதையடுத்து இரண்டாம் பரிசை அதிரை WSC அணியும், 3 ஆம் பரிசை பாண்டிச்சேரி போலிஸ் அணியும், 4 ஆம் பரிசை தொண்டி ப்ரண்டஸ் அணியும் வென்றன. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குழுமி இருந்தனர். தொடர் ஏற்பாடுகளை அதிரை WSC அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Close