பட்டுக்கோட்டை அருகே வேன்–பஸ் மோதி 20 பேர் படுகாயம்..!

அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி இன்று காலை ஒரு தனியார் பஸ் வந்தது. இந்த பஸ் பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது. இதில் பஸ் மற்றும் வேனில் இருந்த 20 பேர் காயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொல்லுக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற விபத்தில் காயமடைந்த வெற்றிவேல் (வயது 50), ஞானமணி (38), நாகராஜன் (20), ராஜா(40), சுமித்ரா (35), பாண்டியன் (40) உள்பட 20 பேரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகச்சைக்காக அனுமதித்தனர்.
அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து நடந்ததும் பஸ் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுபற்றி கொல்லுக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விபத்துக்குள்ளான வேன் பட்டுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதிக்கு சென்றது என்பதும் அதில் திருமண நிச்சய தார்த்தத்துக்கு புறப்பட்டு சென்றவர்கள் காயம் அடைந்தது தெரியவந்து உள்ளது.
-maalaimalar
Close