அழிந்து வருகிறதா அதிரையின் மரபான சஹன் உணவு கலாச்சாரம்

அதிரையும், (சஹன்) சோரும்.

நமதூர் அதிரை பட்டினத்தில் விருந்துகளில் மரவையில் சாப்பாடு வைப்பது வழக்கம் இன்றும் அது நடை முறையில் தான் இருந்து வருகிறதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் ஒரு சஹனுக்கு 6 பேர் ரவுண்டு கட்டுவார்கள் காலப் போக்கில் அது 5 பேராலும் பிறகு 4 நான்கு பேராலும் ரவுண்டு கட்டப்பட்டு வருகிற நேரத்தில் சமீப காலமாக பெரும்பாலும் 3 ன்று நபர்களால் ரவுண்டு கட்டுவதை விருந்துகளில் காணமுடிகிறது.

இனியும் வரக்கூடிய காலங்களில் மூன்று இரண்டாகி அது ஒன்றாகி போய் சஹன் ஒழிந்து பிங்கானா,இல்லை இலையா என்று புரியாத புதிராக உள்ளது.

முன்பெல்லாம் விருந்துகளில் இனிப்புக்கு வாழைப்பழம்,தேங்காய் பால்,சீனி வைப்பார்கள்.

அவற்றை சோறு,இடியாப்பாம் போன்றவற்றில் பினைந்து உண்ட ஊட்டச்சத்துகள்.இப்ப உள்ள பிரிணியிலோ மற்ற இனிப்புகளிலோ இல்லாமல் போயிற்று.

சஹனில் சாப்பிடும் போது கொஞ்சமாக இருந்தாலும் அதை பகிர்ந்துண்ணும் போது அல்லாஹ் அதில் அதிக பரக்கத் வைத்துள்ளான்.

சஹனை காப்போம்.
தனிமையை மறப்போம்.

ஆக்கம்: LMS.அபூபக்கர்

Close