அதிரையில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு மற்றும் ரம்ஜான் விழா (படங்கள் இணைப்பு)

அதிரை லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று காலை லாவண்யா திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் 2017-18 ஆம் ஆண்டின் புதிய தலைவராக ஹாஜி.S.M.முஹம்மது முஹைதீன் பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து துணை துணைத்தலைவராக இர்பான் ஷேக் அவர்களும் செயலாளராக சூப்பர் ஸ்டூடியோ அப்துர் ரஹ்மானும், பொருளாளராக S.அப்துல் ஹமீதும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதில் மாவட்ட முன்னாள் ஆளுநர் S.முஹம்மது ரஃபி, முன்னாள் மாவட்ட ஆளுநர் சீனிவாசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அதை தொடர்ந்து மாவட்ட அமைச்சரவைநிதி ஆலோசகர் பேராசிரியர் அப்துல் காதர், மண்டல தலைவர் SDS.செல்வம், பேரா.செய்யது அஹமது கபீர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இதில் மாவட்ட ஆளுனர் வீரபாண்டியன்,  தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

Close