துபாயில் காமுகனிடம் இருந்து பிலிப்பைன்ஸ் இளம் பெண்ணை காப்பாற்றிய அதிரை இளைஞர் அப்துல் அஜீஸ்

அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். துபாய் நாட்டில் பணியாற்றி வரும் இவர் வேலை முடிந்து தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரமாக பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை அப்துல் அஜீஸ் கண்டார். இதையடுத்து காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய அஜீஸ் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரிடம் சண்டையிட்டு அந்த பிலிப்பைன்ஸ் பெண்ணை காப்பாற்றினார்.

அதைத்தொடர்ந்து பொதுமக்களின் உதவியுடன் அந்த இளைஞரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். தனியாக போராடி இளம் பெண்ணை பாதுகாத்த தஞ்சை இளைஞர் அப்துல் அஜீசுக்கு துபாய் போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Close