அதிரை AFFA அணி சாம்பியன்! (படங்கள் இணைப்பு)

ஆலத்தூர் கால்பந்து கழகம் சார்பாக கடந்த சில வாரங்களாக கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அதிரை AFFA அணி கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அதிரை AFFA அணி நேதாஜி தஞ்சாவூர் அணியை எதிர்த்து கலமிறங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய AFFA வீரர்கள் 3-2 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியை காண அதிரையிலிருந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு அதிரை வீரர்களுக்கு உற்சாகமளித்தனர்.

Close