+2 செய்முறை தேர்வில் விபரீதம், ஒரு மாணவி பலி !!

பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஆடுதுறை எனும் கிராமத்தை சேர்ந்தவர் நடராசன். விவசாய தொழில் செய்து வரும் இவரின் மகள் அகிலாண்டேஸ்வரி (17) ஆடுதுரையிலுள்ள மேல்நிலை பள்ளியில் +2 படித்து வந்தார்.

கடந்த 14ம் தேதி வேதியியல் செய்முறை தேர்வில் ரசாயனத்தை பிப்பெட் மூலம்  உரிஞ்சியபோது  தவறுதலாக அதனை விழிங்கியதால் மூச்சுத்தினரல் ஏற்ப்பட்டது. இதனால் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். பின்னர்  மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை  அளித்தும் பலனின்றி  நேற்றுமுன்தினம் அகிலாண்டேஸ்வரி இறந்தார்.

ஏற்கனவே அந்த மாணவிக்கு ஆஸ்துமா  நோய் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து +2 செய்முறை  தேர்வின்போது, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை  விழிப்புணர்வுடன் கண்காணிக்க  கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

   
        

Close