அதிரை இளைஞர்களின் உதவியை நாடும் சுற்றுசூழல் மன்றம்

  • தூய்மையான அதிரையை உருவாக்க நமது ஊரின் நலன்காக்க பெருமையை நிலைநாட்ட அதிரைவாழ் இளைஞர்களின் பெரும்பங்கு தேவைப்படுகிறது.
  • “தூய்மைதூதுவர்கள்” என்கிற தன்னார்வ தொண்டிற்கு உங்களை அழைக்கிறோம்.
  • தாங்கள் உங்கள் பகுதி மக்களுக்கு தூய்மையின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம்.
  • பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோர்களை அழைத்து பேசி அமைதியான முறையில் ஆலோசனை வழங்கலாம்.
  • தெருக்களில் குப்பைகள் சேர்ந்திருந்தால் சுற்றுச்சூழல்மன்றம் மூலம் பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம்.
  • மாணவர்களிடையே இளைஞர்களிடையை பிரச்சாரம் செய்யலாம்.
  • கலைநிகழ்ச்சி , குறும்படங்கள் தயாரிக்கலாம்.ஆய்வறிக்கை சமர்ப்பிக்கலாம்.
  • குப்பைகளை தரம் பிரித்து நாமே இயற்கை உரம் தயாரிக்கலாம்.
  • வாருங்கள் கைகோர்ப்போம்.தூய்மையான அதிரையை  உருவாக்குவோம்.
Close