கேரளாவில் ஹிஜாப் அணிய மறுத்ததால் கல்லூரியை விட்டு விலகிய மாணவி!

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஹஸ்னா. இவர் மலப்புரத்தில் உள்ள டி.டி.சி பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் கல்விக்கான பி.எட் கல்விக்காக விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இந்த கல்லூரியில் வகுப்பு நடக்கும் போது ‘பர்தா’ அணிந்து பாடம் கவனிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹஸ்னாவின் கணவர், ஹர்ஷத் இதுகுறித்து டி.டி.சி கல்லூரியின் நிறுவனக்குழுமமான கே.என்.எம் குழுமத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், ஒரு பெண்ணுக்காக தங்களின் விதியை திருத்தினால் பின்னர் பலரும் அப்படி விதிவிலக்கு கேட்பார்கள் என்றும், ஆகவே விதியைத் திருத்த வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், அக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் திட்டத்தை ஹஸ்னா கைவிட்டுள்ளார்.

Close