சென்னை புது கல்லூரி மாணவர்களின் சேர்மன் தேர்தலில் அதிரை இளைஞர் இனாமுல் ஹசன் வெற்றி

சென்னை ராயப்பேட்டில் உள்ள புது கல்லூரி மாணவர்களின்  சேர்மன் தேர்தலில் அதிரை இளைஞர் இனாமுல் ஹசன் வெற்றி பெற்றுள்ளார்.

அதிரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் உதுமான் ஹாஃபிழ். அவரது மகன் இனாமுல் ஹசன். இவர் சென்னை புது கல்லுரியில் B.COM இறுதி ஆண்டு படித்துவருகிறார். இவர் சமுதாய பணிகளை செய்வதில் ஆர்வம் செலுத்திவருபவர். மேலும் இவர் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கிய பங்கும் வகித்தார். அந்த கல்லூரி மாணவர்களின் சேர்மனாக இவர் வெற்றிபெற்று அதிரை பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற இவருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Close