அதிரை பேபி ஜுவல்லரி முதலாளிகளை அடித்து நகை கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பல்! ! !

அதிரை ஆஸ்பத்திரி தெருவில் அமைந்துள்ள பேபி ஆபரண மாளிகையில் இன்று இரவு 9:45 மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்லவிருக்கும் சமயத்தில் பேபி ஆபரண மாளிகையின் முதலாளியான ராதா(50), சேகர்(45) அண்ணன் தம்பி ஆகிய   இருவரையும் இரு மோட்டர் பைக்கில் வந்து அரிவாளால் ஆங்காங்கே வெட்டி  நகை கொல்லையடிக்க முயன்ற போது அதனை கண்ட மக்கள் கூச்சலட்டதால் அந்த மர்ம நபர்கள் பயந்து ஓடிவிட்டனர்.

உடனே தகவலறிந்த தஞ்சாவூர் டி.எஸ்.பி அவர்கள் தாக்கப்பட்டவர்களை சந்தித்து ஆருதல் கூறியதோடு அவர்களின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். 

இவர்களுக்கு முதலுதவிக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் ராதாவிற்க்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதால் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு தமுமுக   ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

Close