அதிரை குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், கலெக்டரிடம் மனு

அதிரை அருகே உள்ள செட்டித்தோப்பு கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் என். சுப்பையனிடம் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.
மேலும், கால்நடைகளுக்கும் இந்த குளத்தில் உள்ள தண்ணீரை தான் பயன்படுத்தி வந்தோம். இந்த குளம் மொத்தம் 7 ஏக்கர் 51 சென்ட் நிலப் பரப்பளவில் அமைந்து உள்ளது. இந்தநிலையில் இந்த குளத்தை தனியார் ஆக்கிரமித்து செய்து உள்ளனர்.
மேலும், குளம் அருகே செல்லும் மயான கொட்டகைக்கு செல்லும் இடத்தில் காம்பவுன்ட் சுவரும் எழுப்பி உள்ளனர். இதனால் குளத்தின் நிலப் பரப்பளவு மிகவும் குறைந்த உள்ளது.
தற்போது குளத்தில் தண்ணீர் தேய்க்கி வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்தி வரும் இந்த குளத்தின் தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Close