அதிரை காதிர் முகைதின் ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!

1) காலை 09.20 மணிக்குள்ளும் மதியம் 1.30 மணிக்குள்ளும் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.

2) லோ ஹிப், டைட் பிட் “பேண்ட்”கள் அணிந்து வர அணுமதி இல்லை.

3) அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும்.சட்டையை இருக்கமாக அணியக்கூடாது.கையில் பார்டர் வைத்து அணியக்கூடாது.

4) கை,கால் நகங்கள், தலைமுடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.

5) கைகளில் ரப்பர் பேண்டு,கயிறு,கம்மல்,கடுக்கன்,மற்றும் செயின் அணிந்து வரக்கூடாது.

6) பெற்றோர் கையப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

7) இடைவேளை தவிர மற்ற நேரங்களில் எக்காரணம் கொண்டும் வகுப்பறையை விட்டு வெளியே வரக்கூடாது.

8) பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை.மீறினால் பறிமுதல் செய்யப்படும்.திரும்ப ஒப்படைக்கப்படமாட்டாது.

9) மாணவர்கள் மற்ற மாணவர்களிடம் எவ்வித பிரச்சனையிலும் ஈடுபடக்கூடாது. பள்ளியில் உள்ள எந்த பொருள்களையும் செதப்படுத்தக் கூடாது.

10) மாணவர்கள் ஆசிரியர்களிடம் கண்ணியத்துடனும், பள்ளியின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு : இவைகளை முறையாக கடைப்பிடிக்காத மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவும், ஆசிரியர்கள் ஒழுங்கு கமிட்டி மோலமாகவும் மாணவர்களது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி முடிவு எடுக்கப்படும்.

Close