அதிரை SSMG கால்பந்து தொடரில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது காயல்பட்டினம்

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி FC தஞ்சாவூர் அணியினரை எதிர்த்து காயல்பட்டினம் அணியினர் விளையாடினர்.

இதில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் காயல்பட்டிணம் அணியினர் தங்கள் அணியின் சார்பாக 1 கோல் அடித்து 1க்கு 0 என்ற கோல் கணக்கில் முதல் பகுதி நேர ஆட்டத்தை விளையாடி முடித்தனர்.

இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் நேதாஜி FC தஞ்சாவூர் அணியினர் 1கோல் அடித்து 1க்கு 1ன்று என்ற கோல் கணக்கில் சமநிலையில் பரபரப்பாக விளையாடிக்கொண்டிருந்தனர். தஞ்சாவூர் அணியினர் கோல் அடித்த அடுத்த சில மணிதுளிகளில் காயல்பட்டிணம் அணியினர் தங்கள் அணியின் சார்பாக 2கோல் அடித்து ரசிகர் பெருமக்களை உற்சாக படுத்தி விளையாடி முடித்தனர்.

நாளைய தினம் கால்பந்தாட்டம் நடைபெறாது.

நாளை மறுதினம் 25/07/2017 செவ்வாய் கிழமை அன்று இறுதி ஆட்டமாக திண்டுக்கல் அணியினரும் VS
காயல்பட்டிணம் அணியினரும் விளையாடவுள்ளனர்.

Close