ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!!

பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
மார்ச் 2014 மேல்நிலை தேர்வு எழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் (தட்கல்) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் ஆன்லைனில் இன்று (18ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம். 

தனியார் பிரவுசிங் சென்டர்களின் மூலம் விண்ணப்பிக்க இயலாது. அரசு அமைத்துள்ள சிறப்பு மையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தட்கல் முறையில் இதுவரை மாநில தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு எழுத இயலும் என்ற நிலை இருந்தது. தற்போது இத்திட்டம் எளிமைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு எழுத இயலும். 

உரிய தேர்வு கட்டணத்துடன் ரூ.1,050ஐ சிறப்பு கட்டணமாக சேர்த்து மையத்தில் செலுத்த வேண் டும். இதற்கு முன் மேல்நிலை தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள் (எச்.வகையினர்) இதுவரை எழுதிய மேல் நிலை மதிப்பெண் சான்று நகல்களுடன், பாஸ் போர்ட் அளவு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

தற்போது நேரடியாக மேல்நிலை தேர்வு எழுத விரும்பும் (எச்.பி.வகையினர்) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அசல் மதிப்பெண் சான்றுடன், பாஸ்போர்ட் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வுத்துறையால் அறிவிக்கப்படும் நாளில் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Close