அதிரை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையுடன் ரசிகர்கள் மனதை வென்ற காயல்பட்டினம் அணியினர் (படங்கள் இணைப்பு)

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இறுதிப்போட்டிக்கு காயல்பட்டினம் மற்றும் திண்டுக்கல் ஆகிய முன்னேறின. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது.

இதில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் காயல்பட்டினம் அணி வீரர் அலி முதல் கோலை விளாசி அசத்தினார். இதையடுத்து இரண்டாம் பகுதி நேரத்தில் காயல்பட்டினம் வீரர் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து  அசர்தினார். திண்டுக்கல் அணியினர் பல முயற்சிகளை எடுத்து காயல்பட்டினத்திற்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறினர்.

இறுதியாக காயல்பட்டினம் அணியினர் 3-0 என்ற கோல்கணக்கில் அசத்தல் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. 

Close