பட்டுக்கோட்டை அருகே இளம்பெண் எரித்துக் கொலை

பட்டுக்கோட்டை அருகே உள்ள கறம்பியம் வீரக்குறிச்சியில் தனியார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு அருகே காட்டாறு ஓடுகிறது. அங்குள்ள சுடுகாடு அருகே வயல் வெளி உள்ளது. இந்த வயல் வெளியில் இன்று 25 முதல் 30 வயது மதிக்கதக்க பெண் பிணமாக கிடந்தார். அவரது உடலின் முகம் முழுவதும் எரிக்கப்பட்டு இருந்தது.
மேலும் உடலின் மற்ற பாகங்களிலும் தீக்காயம் இருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வீரக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர்களும் சென்றுள்ளனர்.
அவர்கள் பிணத்தை ஆய்வு நடத்துகிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
அவரை வேறு இடத்தில் யாராவது எரித்து கொலை செய்து விட்டு பிணத்தை சுடுகாடு அருகே உள்ள வயல் வெளியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
(நன்றி மாலைமலர்)
Close