குடிநீர் வழங்க கோரி அதிரை ஈ.சி.ஆர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் (படங்கள் இணைப்பு)

ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அதிரை ஆதம் நகர் பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையான குடிநீரை ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஈசிஆர் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவ்வழியாக வந்த பேருந்துகள், மற்றும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

ஆனால், இது குறித்து பல முறை புகார் அளித்து கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தின் நேரில் வந்து தண்ணீர் தருவதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Close