அதிரையில் புதிய டேக்ஸி மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம்!(படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலையத்தில் வாடகை கார்கள் பல வருடங்களாக நிறுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில் தற்பொழுது அதிரை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் நிலையத்தில் டேக்சிகளை நிறுத்துவது குறித்து அதிரை பேரூராட்சிக்கும் பேருந்து நிலைய டேக்ஸி மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கத்துக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை பட்டுக்கோட்டை RDO அலுவலகத்தில் சில மாதத்திற்கு முன் நடைப்பெற்றது. இதில் அதிரை பேரூராட்சி சார்பாக தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயலாளர், கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், அப்பியான் (எ) யூசுஃப், அப்துல் லத்தீப் ஆகியோரும் டேக்சி உரிமையாளர்கள் சார்பாக தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் கலந்துக்கொண்டனர். 

இந்த கூட்டதில் அதிரை காதிர் முகைதீன் பள்ளி அருகே முத்தம்மாள் தெரு எதிரே புதிய டேக்ஸி மார்க்கெட் அமைப்பது என்று சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டது.இதனையடுத்து இன்று முதல் புதிய டேக்ஸி மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கியது.முதல் கட்ட பணியாக கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் ஒரு சில வாரங்களில் நிறைவு பெற்று விடும் என எதிர்பாக்கப்படுகிறது. 

Advertisement

Close