மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நியூ காலேஜ் சேர்மன் அதிரை இனாமுல் ஹசன்! (படங்கள் இணைப்பு)

அதிரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் உதுமான் ஹாஃபிழ். அவரது மகன் இனாமுல் ஹசன். இவர் சென்னை புது கல்லுரியில் B.COM இறுதி ஆண்டு படித்துவருகிறார். இவர் சமுதாய பணிகளை செய்வதில் ஆர்வம் செலுத்திவருபவர். மேலும் இவர் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கிய பங்கும் வகித்தார். அந்த கல்லூரி மாணவர்களின் சேர்மனாக இவர் வெற்றிபெற்று அதிரை பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் இவர் நேற்றைய தினம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து இன்று அவர் திமுக செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை தனது நண்பர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது எதிர்கட்சி துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரை முருகன் உடன் இருந்தார்.

Close