மேல்நிலைப்பள்ளியாகிறது அதிரை அரசு பெண்கள் பள்ளி!

அதிரை மெயின் ரோட்டில் கடந்த பல ஆண்டுகாலமாக அரசு மகளிர் உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஆண்டுதோறும் வெளியாகும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இப்பள்ளி மாணவிகள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அரசுப்பள்ளியாக இருந்தாலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இங்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இப்பள்ளி இந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தர உயர்வு பெற்றுள்ளது. இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு சேர்க்க இந்த ஆண்டிலேயே துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Close