தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு தமுமுகவினர் பொருளுதவி செய்தனர்!

கடந்த 20ம் தேதி ஏற்ப்பட்ட தீவிபத்தில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில்  63 வீடுகள் எரிந்து சேதமடைந்தன அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக சார்பாக இன்று 26.7.17 உதவி பொருள்களை மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் #தஞ்சைI.M.பாதுஷா அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் தஞ்சை (வ) மாவட்டம் தமுமுக – மமக மாவட்ட நிர்வாகிகள் செல்லப்பா , சலீம், சல்லி நஜீர்,ரஹமத் அலி,பாபுஜி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் முபாரக், தஞ்சை (தெ) மாவட்ட நிர்வாகிகள் ரியாஸ் அகமது, அப்துல் ஜப்பார், லுக்மன் ஹக்கீம் மற்றும் கிளை நிர்வாகிகளோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருள்களை வழங்கினர். ( பாய், தலையணை, போர்வை, கைலி, நைட்டி, துண்டு, பிளாஸ்டிக் டப், மக், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சில பொருள்கள்) வழங்கபட்டது.

Close