MSM நகர் வீடுகளில் குடிநீர் மோட்டார்களை சீஸ் செய்த அதிகாரிகள்!

ஏரிபுறகரை ஊராட்சிக்கு உட்பட்ட MSM நகரில் இன்று போலீசார் உதவியோடு RTO தலைமையில் குடிநீர் மோட்டார்கள் அப்புறப்படுத்தபட்டது. எஞ்சி இருக்கும் மோட்டார்களை மக்களே அப்புறபடுத்த நாளை மாலை 5 மணி வரை கெடு கொடுக்கப்ட்டுள்ளது.

 

இன்று 11:30 மணி அளவில் வீடு வீடாக சென்று குடிநீர் மோட்டாரை கைபற்றி உள்ளார்கள். ஜும்மா தினம் என்பதனால் பூட்டி இருக்கும் ஒரு சில வீட்டு சுவர் வழியாக அனுமதி இன்றி வீட்டில் உள் நுழைந்து மோட்டாரை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி ECR ல் சாலை மறியல் செய்ததில் விளைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

இறுதியாக பொதுமக்களுடனான பேச்சு வார்த்தையின் பெயரில் தொடர்ந்து வழங்காமல் மாதத்தில் 15 நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. சீஸ் செய்யபட்ட மோட்டார்கள் திரும்ப வழங்கபடும் எனவும் கூறபட்டது.

 

மோட்டார் இல்லாமல் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடி தண்ணீர் வழங்கபடும் என்று RTO வாக்குறுதி அளித்துள்ளார்.

Close