சென்னை AMS கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

சென்னை ஆவடியில் அமைந்துள்ள ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி. இங்கு அதிரையை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 2016ல் பொறியியல் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான 13-வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலீபுல்லாஹ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் அதிரையை சேர்ந்த அப்துல் சலாம், அப்துல் கரீம், முஹம்மது முபாரக், M.முஹம்மது சலீம், ஹாஜா நஜுபுத்தீன், A.முஹம்மது சலீம் ஆகிய மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

இவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close