அதிரையில் நடைபெற்ற லியோ கிளப் கூட்டத்தில் பலர் பங்கேற்ப்பு


அதிரை லாவண்யா திருமண மண்டபத்தில் அதிரை லியோ கிளப் சார்பாக நடத்தும் மாபெரும் மாவட்ட சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 7:45 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சியில் 8:00 மணியளவில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. சரியாக 8:30 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் 9:30 மணியளவில் பதாகை அணிவகுப்பும், 10:00 மணிக்கு சந்திப்பும் துவங்கியது.
சரியாக 10:05க்கு தேசிய கொடியேந்தி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடிவணக்கம், உறுதி மொழி ஆகியவற்றை லியோ கிளப் உறுப்பினர்கள் நிகழ்த்தினர். பின்னர் உலக அமைதிக்காக வேண்டி ஒரு நிமிடம் மௌனம் காக்கப்பட்டது.
10:15 அளவில் வரவேற்புரையை லயன் ஹாஜி அப்துல் காதர் அவர்களும்,
10:25 மணியளவில் ஆளுனர் அறிமுகம்
10:30 மணியளவில் துவக்க உரையை என்.சன்முகவேல் அவர்களும்
11:00 மணிக்கு மாவட்ட தலைவர் அறிமுகம்
11:05 தலைமையுரையை லயன் மேஜர் கணபதி சார் அவர்களும்
11:30 மணிக்கு சேவை விருதுகள் வழங்கப்பட்டன
11:35 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள் அறிமுகம்
11:40 சிறப்பு விருந்தினர் உரையை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் திரு கருணாகரன் அவர்கள் நிகழ்த்தினார்.
12:05 மணிக்கு வழக்கரிஞர் த. ஸ்டாலின் குண்சேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
12:50 மணிக்கு லியோ செயல் அறிக்கையை லியோ.கே.வினோத் அவர்கள் வாசித்தார்.
1:00 மணிக்கு வாழ்த்துரையை லயன் S.முகமது ரபி அவர்களும்
1:15 மணிக்கு லியோ விருதுகள் அறிக்கையை லியோ கவுன்ஸில் தலைவர் கே. கணேஷ் குமார் அவர்கள் வாசித்தார்.
1:25 மணியளவில் மதிப்பீட்டு உரையை முன்னால் மாவட்ட ஆளுனர் திரு. ஜி.மனோகரன் அவர்கள் வாசித்தார்.
இறுதியாக
1:30 மணியளவில் நன்றியுரையை லயன். N.U. ராமமூர்த்தி அவர்கள் வாசிக்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது
இந்நிகழ்ச்சியில் அதிரை லியோ சங்க நிர்வாகிகள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.அதிரை பிறை செய்திகளுக்காக …. சாலிஹ் மற்றும் நூருல்

Close