நடுத்தர மக்களை நடுங்க வைத்துள்ள இரட்டை அறிவிப்புகள்

சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ஒரு மாதத்துக்கு 4 ரூபாய் வீதம் குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதும் நீக்க மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, ‘சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை மாதம் 2 ரூபாய் வீதம் குறைத்து வாருங்கள்’ என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இனி மாதம் 4 ரூபாய் வீதம் குறைக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இப்போது, 14.2 கிலோ எடையுள்ள பனிரெண்டு சமையல் காஸ் சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. 12-க்கு மேல் போனால், காஸ் சிலிண்டரை மானியம் இல்லாமல் 564 ரூபாய் வாங்க வேண்டி வரும். மத்திய அரசின் இந்த முடிவு சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மிள்வதற்குள் நமது தமிழக பினாமி அரசு ரேசன் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

அதில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருள்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளது. ஒய்வு பெற்ற அரசு ஊழியர் குடும்பத்துக்கும் ரேஷன் பொருள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Close