அதிரையில் அதிரடி காட்டும் மழை!

கடந்த மார்ச், ஏப்ரல், மே, மாதங்களில் தமிழகமெங்கும் வெயிலின் கோரத்தாண்டவம் தலைவிரித்து ஆடியது. இதன் காரணமாக மக்கள் வெளியில் செல்வதற்கே தயங்கினர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அதிரை உட்பட பல பகுதிகளில் மழை பரவலாக பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை அடுத்த 3 மாதங்கள் பெய்யும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இந்த ஜூலை மாதம் துவங்கியதில் இருந்தே மழைக்காக அறிகுறி குறைந்து மீண்டும் கோடைகாலம் தொடங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு அதிரையில் ஏப்ரல், மே மாதங்களுக்கு நிகராக வெயில் 95,100 டிகிரிகளில் மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக அதிரையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இன்று இஷா தொழுகைக்கு பிறகு பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Close