அதிரை உள்ளிட்ட ECR சாலையோர ஊர்களுக்கு ஆபத்து!

ECR சாலையை எடப்பாடி அரசு பாஜகவின் திட்டத்திற்கு கொடுத்ததின் ஆபத்தை தமிழர்கள் இன்னும் விளங்கி கொள்ளவில்லை. தமிழக கடலோர எல்லை முழுவதும் இந்திய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பது தமிழினம் அழிவை நோக்கிய பாதைக்கு மிக விரைவாக செல்கிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை புதுசேரி சாலையில் போர் விமானம் தரையிறங்க அனுமதி என்றால் அதன் பின்விளைவு பற்றி இன்னும் நாம் யோசிக்கவில்லை. அதிரை உள்ளிட்ட ECR சாலையோர பகுதிகள் முழுவதுமாக ராணுவ கட்டுப்பாட்டிற்குள் வருமென்றால் அங்கு வாழும் மீனவர் மற்றும் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்ப வாய்ப்புகள் உள்ளன. எதிர்க்கும் மக்களை சமாளிக்க ராணுவம் மற்றும் டாங்கி இறக்கப்படும்.

இதன் மூலம் ECR பகுதிக்கு வளர்ச்சி வரும் என்றும் கூறும் அயோக்கியர்களை நம்பும் முட்டாளாக தொடர்ந்து இருக்கிறோம்.

Close