அதிரையில் மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் சிறைபிடிப்பு, போலீஸார் அதிரடி..!

அதிரை அருகே பள்ளிக்கொண்டான் கிராமத்தை கடந்து செல்லும் நஸூனி ஆற்றங்கரையில் மணல் அள்ளியதற்காக இன்று 7 மாட்டு வண்டிகளை அதிரை போலீஸார் செய்தனர்.
நஸூனி ஆற்றங்கரையில் இன்று அதிகாலையில் 7 மாட்டு வண்டிகளை வைத்து மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு உடனே விரைந்த அதிரை போலீஸார் காலை 7:30 மணியளவில் வண்டிகளை கைப்பற்றி அதன் உரிமையாளர்களையும் காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்தனர். 
சில நேர பேச்சு வார்த்தைக்கு பின் மாட்டு வண்டிகள் இன்று காலை 9:30 மணியளவில் விடுவிக்கப்பட்டன. நாளை மீண்டும் அதிரை காவல் நிலையத்திற்க்கு வண்டிகளுடன் உரிமையாளர்கள் வந்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் போலீஸார் கூறியதாக வண்டி உரிமையாளர்கள் கூறினர்.
இது குறித்து மணல் அள்ளி கைது செய்யப்பட்டவர்கள் அதிரை பிறை செய்தியாளரிடம் கூறியதாவது, மணல் அள்ளுவதற்க்கு அரசாங்கம் அனுமதி அளித்து விட்டதாகவும் ஆனால் அதிரை போலீஸார் அது தெரியாமல் எங்களை கைது செய்துவிட்டனர் எனவும், இதனால் நாள் கூலி பெற்று வாழ்க்கையை கடத்தி வரும் எங்களுக்கு இது போன்ற செயல்கள் மனச்சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Close