அதிரையில் வான வேடிக்கையுடன் துவங்கிய இரவு நேர கிரிக்கெட் போட்டி..!

அதிரை பீச் கிரிக்கெட் கிளப் அணியினர் நடத்தும் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் போட்டி சில மணிநேரங்களுக்கு முன்பு I.T.I மைதானத்தில் வான வேடிக்கையுடன் கோலாகல‌மாக‌ துவங்கியது.
 தற்பொழுது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடைசியாக முடிவடைந்த இரண்டு லீக் போட்டிகளிலும் AFCC-A அணியினரும் AFCC-B அணியினரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்த இரவில் இன்னும் பல அணிகள் விளையாடுவதற்காக முன் பதிவு செய்து காத்திருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் அதிரையின் மேலும் முக்கிய கிரிக்கெட் அணியான சிட்னி ஃப்ரண்ட்ஸ் அணியினரும் போட்டியில் களமிறங்கவுள்ளனர். 
எனவே இந்த இரவில் அணல் பறக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பஞ்சமில்லை..
புகைப்படங்கள்: அதிரை பிறை ஜைது

Close