அமெரிக்காவில் கராத்தேவில் கலக்கிய நம்ம ஊரு சிறுவன்!

பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஶ்ரீநிவாசன். அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 8 வயது மகன் சஞ்சித் ஶ்ரீநிவாசன் கராத்தே, ஃபேஸ்பால் விளையாட்டு, அறிவியல் என பலதுறைகளில் ஆர்வம் மிகுந்தவராக உள்ளார்.

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள பஃபலோ க்ரூவ் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் படித்துவரும் சஞ்சித், இந்த ஆண்டு நடந்த தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பலகை உடைக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இது குறித்து சஞ்சித்தின் தாய் சுபத்ரா கூறியதாவது,

  • சஞ்சித் 5 வயதில் இருந்தே டேக்வாண்டோ, பேஸ்பால் கற்று வருகிறார். இந்த இரண்டு பிரிவுகளிலும் அவர் ஏற்கனவே பல பரிசுகள் வாங்கியுள்ளார். சஞ்சித் ஒரு டிஏஏன் பேக் பெல்ட் பெற்றவர். இந்த ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் வென்றார்.
  • சஞ்சித் 3 நிமிடங்களில் 30 பலகைகளை உடைத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். என் மகனுக்கு விஞ்ஞானி ஆகும் ஆசை உள்ளது. அவர் கனவை நிறைவேற்ற நாங்கள் உதவி செய்வோம் என்றார்.

நம்ம ஊரு சிறுவனுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Close